அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவான நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.
அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இது புயல் சின்னமாக மாறாமல், இன்றே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும், ரத்தினகிரிக்கு டபோலிக்கும் இடையே தாழ்வு மண்டலம் கரையை கடக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கேரளத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பல மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் ஓரிரு நாள்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களுக்கு மழை!

அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைகிறது காற்றழுத்தத் தாழ்வு!

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



