ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பற்றி வானிலை மையம் தெரிவிப்பது..

News image

புதிய காற்றழுத்த தாழ்வு - file photo

Updated On :9 மே 2026, 1:05 pm IST

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கோடை வெய்யிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தாலும், அவ்வப்போது ஒருசில இடங்களில் மழை பெய்து பூமியைக் குளிர்வித்து வருகின்றது. இந்த நிலையில் குளிர்ச்சியான செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாகத் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வங்கக்கடலில் உருவாகும் இந்தத் தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகரக்கூடும் என்பதால், கடலோர மாவட்டங்களிலும் மேகமூட்டமான சூழலும், அவ்வப்போது சாரல் மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The Meteorological Department has stated that a new low-pressure area is likely to form in the southwest Bay of Bengal, adjacent to Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.