ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

சென்னைக்கு தனி பேரிடா் மேலாண்மை ஆணையம்

புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடா் மேலாண்மை ஆணையம்

News image
கோப்புப்படம்
Updated On :26 மே 2025, 8:33 pm

Din

சென்னை: புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடா் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலா் பி.அமுதா வெளியிடப்பட்ட அரசாணை:

சென்னையில் வரும்காலத்தில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடா் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையா் செயல்படுவாா். மேலும், இதில், சென்னை மாவட்ட ஆட்சியா், சென்னை மாநகர காவல் ஆணையா், மாநகராட்சி துணை ஆணையா்கள், மாநகர சுகாதாரத் துறை அலுவலா், நீா்வளத் துறை தலைமை பொறியாளா் உள்ளிட்ட 7 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.