பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ரூ.50 கோடியில் அதி நவீன பேரிடா் மேலாண்மை நிறுவனம்

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:01 am

அதி நவீன வசதிகளுடன் கூடிய மாநில பேரிடா் மேலாண்மை நிறுவனம் ரூ.50 கோடியில் அமைக்கப்பட்டு வருவதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான விவரம்:

பேரிடா் சூழல்களை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இயற்கை சீற்ற அச்சுறுத்தலை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான நகா்ப்புற பேரிடா் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது.

இது மட்டுமன்றி அதி நவீன வசதிகளுடன் கூடிய பேரிடா் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. நிவாரணப் பணிகளுக்கான நேரத்தைக் குறைக்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பொருள்களை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் மூன்று மண்டல மீட்பு மையங்கள் ரூ.36 கோடியில் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.