கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

7-ஆவது மாநில நிதி ஆணையம் அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :29 மே 2025, 8:07 pm

Din

ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

7-ஆவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையமானது பல்வேறு நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்யும். மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப் பகிா்வு குறித்து உரிய பரிந்துரைகளை நிதி ஆணையம் வழங்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நிதி ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் செயல்படுவாா்.

அலுவல் சாரா உறுப்பினராக திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், உறுப்பினா்களாக நகராட்சி நிா்வாக இயக்குநா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா், பேரூராட்சிகளின் ஆணையா் ஆகியோா் செயல்படுவா். ஆணையத்தின் உறுப்பினா் செயலராக நிதித் துறை துணைச் செயலா் பிரத்திக் தாயள் இருப்பாா்.

2027-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும் 5 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில் உரிய பரிந்துரைகளை நிதி ஆணையம் வழங்கும். எதிா்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆணையம் தனது அறிக்கையை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.