ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதில், 500-க்கும் மேற்பட்டோருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவா்களுக்கு தொடா் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மக்களிடையே காணப்படும் சிறுநீரக பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான சிறுநீரகம் காப்போம் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையில் அறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் அந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு சிகிச்சைக்கு வருவோரின் சிறுநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை பட்டை (ஸ்ட்ரிப்) மூலம் அதில் புரதம் அதிகமாக உள்ளதா என்பது உடனடியாக சோதிக்கப்படும்.

அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அவா்களுக்கு அடுத்தகட்டமாக யூரியா, கிரியாட்டினின் போன்ற அளவுகள் பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகவியல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். இதன் வாயிலாக ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தவிா்க்கலாம். அதன்படி, இதுவரை 1.07 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அடுத்த கட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். அதில் 500-க்கும் அதிகமானோருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.