

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் வெடித்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் மக்கள் அதிகம் உள்ள பேருந்து நிலையங்களிலும் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகள் அச்சப்படாத வகையில் ரயில் நிலையங்களில் இருந்து வெளியே வருவோரை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். தீவிர சோதனைக்குப் பிறகே ரயில் நிலையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், சென்னையில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மட்டுமின்றி எல்லைகளில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: 10 பேர் பலி - விபத்தா? சதிச்செயலா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.