

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பான விவரங்களைக் கணித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீன் ஜான், மழை நிலவரம் தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று(நவ. 9) பெய்த மழைக்குப் பிறகு, இன்றும்(நவ. 10) தென் மாவட்டங்களில் மழை தொடரும்.
கிழக்கு காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்கள் முதல் புதுவை கடற்கரை வரை நாளை முதல் மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நவ. 11, 12 ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறைந்து, நவ. 18, 19 தேதிகளில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.