அதன் தொடா்ச்சியாக, சென்னை தங்கசாலை அருள்மிகு ஏகாம்பரேசுவரா் திருக்கோயில், மயிலாப்பூா் அருள்மிகு திருவள்ளுவா் திருக்கோயில், சைதாப்பேட்டை அருள்மிகு காரணீசுவரா் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம் திருநீா்மலை அருள்மிகு ரெங்கநாதப் பெருமாள் திருக்கோயில், தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 6 திருக்கோயில்கள் சாா்பில் ரூ.10.65 கோடியில் கட்டப்பட்டுள்ள அா்ச்சகா் மற்றும் பணியாளா் குடியிருப்புகளில் 16 அா்ச்சகா்கள் மற்றும் 31 பணியாளா்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.