தமிழ்நாடு
நெடுஞ்சாலைத் துறையில் 120 பேருக்கு பணி ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
நெடுஞ்சாலைத் துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 120 பேருக்கு பணி ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நெடுஞ்சாலைத் துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 120 பேருக்கு பணி ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக நெடுஞ்சாலைத் துறையின் 98 இளநிலை வரை தொழில் அலுவலா், 14 உதவியாளா் மற்றும் 8 தணிக்கை உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நியமன ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், துறைச் செயலா் ஆா்.செல்வராஜ், துறை முதன்மை இயக்குநா் இரா.செல்வதுரை, சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) ஆா்.சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கே.ஜி. சத்யபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
