தாம்பரம் அருகே பயிற்சி விமானம் விபத்து: விமானப்படை விளக்கம்!

சென்னை தாம்பரம் அருகே பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக இந்திய விமானப்படை விளக்கம்
விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்
விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்
Updated on
1 min read

சென்னை தாம்பரம் அருகே பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து விமானப் படையின் எக்ஸ் பக்கத்தில், ``இந்திய விமானப்படையின் பிசி-7 எம்கே II பயிற்சி விமானம், இன்று மதியம் 2.25 மணியளவில் வழக்கமான பயிற்சியின்போது சென்னை தாம்பரம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானி பத்திரமாக உயிர்த்தப்பினார்.

விபத்து தொடர்பாக நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை அறிந்த விமானிகள், பாராசூட்டுடன் வெளியே குதித்த நிலையில், விமானம் சேறு அதிகம் நிறைந்த பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

புதுக்கோட்டை அருகே நேற்று சிறிய ரக விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு மழை விடுமுறை கிடைக்காதா?

Summary

Indian Air Force PC-7 Mk II trainer aircraft met with an accident near Chennai Tambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com