தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வடக்கு நோக்கி மெல்ல நகரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நகர்வால் இலங்கை கடற்பகுதியில் மழைக்கு வாய்ப்பு..

News image

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

Updated On :17 நவம்பர் 2025, 6:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கை கடற்பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. அதோடு ஒருசில பகுதிகளில் மேகமூட்டத்துடன், சாரல் மழையும் பெய்யு வருகின்றது. சிலு சிலுவென குளிர்ந்த காற்றும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 ணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று(நவ,17) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும்,

கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தூத்துக்குடி, நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Summary

The Meteorological Department stated that the low pressure area over the Sri Lankan sea areas is slowly moving in a northwesterly direction.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.