6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூர் பலி: மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

கரூர் பலி தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரம்..

News image
சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக வந்திருந்த பவர் கிரீட் அதிகாரிகள்
Updated On :17 நவம்பர் 2025, 6:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் மின்வாரியத்துறை அதிகாரிகள் இரண்டு பேரிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஐந்து பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை விசாரணை மேற்கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் நேரடியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 7-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள விவிஜிஆர் நகர் மற்றும் சிவலிங்கா ஆசாரியார் தெரு வில் வசிக்கும் நெரிசலில் சிக்கிக் காயமடைந்த உஷா மற்றும் அவரது தாயார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கரூர் மாவட்டம் க. பரமத்தி பகுதியில் உள்ள பவர் கிரீட் நிறுவனத்தில் பணியாற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் 2 பேர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் ஆகியோர் சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு காலை 11:30 மணியளவில் வருகை தந்தனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

CBI officials questioned two Electricity Board officials and five Public Works Department officials in the Karur stampede incident case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.