வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

டிட்வா புயல்: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

டிட்வா புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

News image
கோப்புப்படம்
Updated On :28 நவம்பர் 2025, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.29) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

டிட்வா புயலைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று(நவ.29) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தஞ்சை, விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நவ. 27 அன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.