மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

25 கி.மீ. வரை தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்! - வானிலை ஆய்வு மையம்

டிட்வா புயல் நிலவரம் பற்றி வானிலை ஆய்வு மையம் தகவல்...

News image

வானிலை ஆய்வு மைய புகைப்படம்... - IMD

Updated On :29 நவம்பர் 2025, 8:20 am

வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் தமிழக கடற்கரையை 25 கிமீ வரை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய 'டிட்வா' புயல் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

புயல் நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்(பிற்பகல் 1.30 மணியளவில்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு இலங்கையில் கடந்த 6 மணி நேரமாக டிட்வா புயல் 8 கிமீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று(நவ. 29) அன்று காலை 8.30 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டது.

யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும் வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே 140 கிமீ, காரைக்காலுக்கு தென்கிழக்கே 170 கிமீ, புதுச்சேரிக்கு 280 கிமீ மற்றும் சென்னைக்கு தெற்கே 380 கிமீ தொலைவில் உள்ள புயல், தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே சென்றடையும்.

இந்த புயல் வடக்கு - வடமேற்கு நோக்கி நகரும்போது தமிழக கடற்கரையை இன்று(நவ. 29) நள்ளிரவு 60 கிமீ தொலைவிலும் நாளை(நவ. 30) காலை 50 கிமீ தொலைவிலும் நாளை(நவ. 30) மாலை 25 கிமீ தொலைவிலும் நெருங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

IMD says that Cyclone Ditwah will near Tamil Nadu by up to 25 km on nov. 30 evening

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.