கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தீபமேற்றுதல் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், நெரிசலைக் குறைக்கும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 3,4 -ஆம் தேதிகளில் காலை 9.1மணிக்குப் புறப்படும் சென்ட்ரல் -சென்னை கடற்கரை விரைவு சிறப்பு ரயில் (வண்டிஎண் 06051), அதே நாளில் இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தாம்பரம் வழியாக செல்லும். விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 30, டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருவண்ணாமலை முன்பதிவில்லா விரைவு சிறப்புரயில் (வண்டி எண் 06130), அதே நாளில் முற்பகல் 11.45 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் அதே நாள்களில் திருவண்ணாமலையில் பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இவ்விரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -வேலூர் கண்டோன்மென்ட் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06168), மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் சென்றடையும்.
இதுபோன்று எதிர்வழித்தடத்தில் வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 4,5,6 -ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்குப் புறப்படும் வேலூர்கண்டோன்மென்ட் -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06167), அதே நாள்களில் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, போளூர், ஆரணி சாலை, சேதராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் காலை 9.45மணிக்குப் புறப்படும் தாம்பரம் -திருவண்ணாமலை முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்(வண்டிஎண்06049), அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து அதே நாள்களில் மாலை 5 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -தாம்பரம்முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06050), இரவு 9 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த இரு ரயில்களும் செங்கல்பட்டு,மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Southern Railway is operating special trains from places including Chennai and Villupuram on the occasion of the Karthigai Deepam festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

புதுச்சேரியில் 3 நாள்களுக்கு 2 ரயில்கள் ரத்து

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



