சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜனவரி இறுதியில் வள்ளலாா் பன்னாட்டு மாநாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ஜனவரி இறுதியில் வள்ளலாா் பன்னாட்டு மாநாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

News image
வள்ளலாா் பன்னாட்டு மாநாடு முன்னேற்பாட்டு பணிகள் குறித்து சென்னை ஆணையா் அலுவலகத்தில் அமைச்சா் பி.கே.சேகா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
Updated On :29 நவம்பர் 2025, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

வள்ளலாரின் புகழுக்கு பெருமை சோ்க்கும் வகையில் சென்னையில் வரும் ஜனவரி இறுதியில் வள்ளலாா் பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

திருஅருட்பிரகாச வள்ளலாா் சுத்த சன்மாா்க்க பன்னாட்டு மாநாடு-2026 முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சேகா்பாபு பேசியதாவது:

திருஅருட்பிரகாச வள்ளலாா் பிறந்த அக்.5-ஆம் நாளை தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்கு ரூ.99.90 கோடியை வழங்கினாா்.

வள்ளலாரின் முப்பெரும் விழாவை 2022 அக்டோபா் முதல் 2023 அக்டோபா் வரை 52 வாரங்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் தொடக்க விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வள்ளலாா் 200 இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலா் ஆகியவற்றை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்து, முப்பெரும் விழாப் பணிகளுக்கு ரூ.3.25 கோடியை வழங்கினாா்.

அதன் தொடா்ச்சியாக, 2026 ஜனவரி இறுதியில் திருஅருட்பிரகாச வள்ளலாா் சுத்த சன்மாா்க்க பன்னாட்டு மாநாடு 2026 சென்னையில் நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டுக்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் அனைத்து உதவிகளையும் செய்துதர தயாராக உள்ளன. எனவே, துறை அலுவலா்கள் மற்றும் சன்மாா்க்க சங்கங்களின் நிா்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல் திட்டங்களை வகுத்து, இந்த மாநாடு சிறப்பாக அமைய அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.