Cyclone Ditwah
டிட்வா புயல்

சென்னையைத் தாக்குமா டிட்வா புயல்? - அமைச்சர் பேட்டி

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி
Published on

அனைத்து மாவட்டங்களிலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனமழை பெய்யவுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்.

நாகையில் தோப்புத்துறை, நாலு வேதபதி ஆகிய 2 இடங்களில் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த புயலானது ராமநாதபுரத்தில் இருந்து கடற்கரையையொட்டியே நகர்ந்து வருகிறது. சென்னை வரை வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் சென்னைக்குள் வருகிறதா அல்லது வெளியே போகிறதா என்பதை வானிலை ஆய்வு மையம் இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை.

சென்னைக்குள் வராமல் சென்னைக்கு வெளியே கடற்கரையையொட்டியே செல்லும் என இன்று கூறியிருக்கிறார்கள். முதல்வர் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்.

முகாம்கள், மக்களுக்குத் தேவையான பொருள்கள், 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவைக்க இருக்கிறோம். பாதிப்பை பொருத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்புவோம். விமானப்படை, கடலோர காவல் படையும் தயாராக இருக்கிறார்கள். எந்தவொரு பாதிப்பும் இல்லாதவண்ணம் இந்த புயலை அரசு சமாளிக்கும்" என்று கூறினார்.

இதுவரை போக்குவரத்து பாதிப்பு, உயிரிழப்பு இல்லை. 16 கால்நடைகள் மரணமடைந்துள்ளன. 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. அனைத்து மாவட்டத்திலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன.

இன்றும் நாளையும் கடற்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம். 1.24 கோடி பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

Summary

Will Cyclone Ditwah hit Chennai? Minister KKSSR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com