
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த பிறகு, ஒரு விரிவான செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று தவெக இணைச் செயலாளர் கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தவெக இணைச் செயலாளர் நிர்மல் குமார் பேசுகையில் ``கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பொதுச் செயலாளர் வாயிலாக, இன்னும் ஓரிரு நாள்கள் அறிவிப்புகள் வெளிவரும். எந்த இடம்? எந்த தேதி என்பவற்றை நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்தத் துக்கத்தில் இருந்து நாங்கள் எந்த நிகழ்ச்சியும் செய்யவில்லை. கரூர் மக்களை சந்தித்த பிறகுதான், எங்களின் எந்தவொரு விஷயத்தையும் அடுத்தகட்டத்துக்கு யோசிக்க முடியும். ஏனெனில், அதுதான் எங்களின் முக்கியம்.
இடம் கிடைப்பது முதலான சிக்கல்கள்வரையில் மற்ற கட்சிகளைவிட எங்களுக்கு அதிகமிருப்பதால், நாங்கள் திட்டமிட வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், ``வழக்கு தொடர்பாக கரூர் மக்களைச் சந்தித்த பிறகு விரிவான செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும். ஏனெனில், நடந்த நிகழ்வுகள், என்னென்ன கேள்விகள் எங்கள் மனதில் இருந்தது என்பதையும் நீதிமன்றத்தில் கூறியுள்ளோம்.
யாரும் எங்கும் தலைமறைவாக இல்லை; யாரும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் வாழ்நாள் துக்கத்தில் இருக்கிறோம்’’ என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: டாஸ்மாக் விவகாரம்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.