
தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று(அக். 16) நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை(அக். 17) நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை முதலே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக காயல்பட்டினம், திருச்செந்தூரில் 150 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச மழை பொழியும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.