கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சீமான் மீது வழக்குப்பதிவு

நீதிமன்ற உத்தரவின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

IANS

Updated On :19 அக்டோபர் 2025, 6:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

நீதிமன்ற உத்தரவின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்குரைஞர் அலெக்ஸாண்டர் சார்லஸ் தொடர்ந்த வழக்கில் வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்குரைஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் புகார் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Chennai Thirumangalam police have registered a case against Seeman on a court order.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.