
கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட கோவை குற்றாலம் அருவியில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாள்கள் என்பதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வரும் நிலையில், வனத் துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையாலும், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி பொது மக்கள் குளிக்க அனுமதி மறுக்கபட்டுள்ளது.
மேலும் பண்டிகை காலம் என்பதால் பொது மக்கள் பார்வைக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஏர் சீனா விமானத்தின் கேபினில் திடீர் தீ விபத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.