
வரும் அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மழை நிலவரம் தொடர்பாக பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று உள்பட அடுத்த 2-3 நாள்களுக்கு (அக்டோபர் 21-23) பலத்த மழை பெய்யும்.
அடுத்து வரும் அக். 25/26 வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இந்த மாத இறுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சக்கரமாக(புயலாக) வலுவடைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று(அக். 21) மழைக்கு வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களில் (நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை), ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.