மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அதிமுக தலைமைக்கு 10 நாள் கெடு விதிக்கவில்லை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக ஒன்றிணைவது குறித்து முன்னாள அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

News image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

IANS

Updated On :23 அக்டோபர் 2025, 3:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சித் தலைமைக்கு பத்து நாள்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள்தான் அதனை தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், விரைவில் நல்லது நடக்கும் என்றார்.

மேலும், இன்று நீங்கள் பங்கேற்க இருக்கும் திருமண நிகழ்ச்சியில் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இதுவரை ஏதும் இல்லை, நல்லதே நடக்கும்” என பதிலளித்த அவரிடம், அதிமுக ஒன்றிணைய பத்து நாள் கெடு விதித்தீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, ”நான் பத்து நாள் கெடு விதிக்கவில்லை, பத்து நாள்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.

ஆனால் ஊடகங்கள்தான் தவறாகப் போட்டுவிட்டனர்” என பதிலளித்தார்.

ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த கட்சி இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு, ”அது உங்கள் கருத்து” என்று பதிலளித்துப் புறப்பட்டார்.

Summary

Former Minister Sengottaiyan explains about AIADMK merger.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.