

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்தி வருகின்றது. இதனால், ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.