

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவ. 1 ஆம் தேதி முழு நாள் இயங்கும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புயல் சின்னம் காரணமாக பெய்த மழைக்காக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவ. 1 ஆம் தேதி(சனிக்கிழமை) பள்ளிகள் முழு நாள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காலையில் குறைவு; மாலையில் உயர்வு: தங்கம் விலை நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.