திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது! ஒடிஸா இளைஞா் கைது!

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது பற்றி...

News image

திருடப்பட்ட அரசுப் பேருந்து - X

Updated On :12 செப்டம்பர் 2025, 11:21 am IST

கோயம்பேடு பேருந்து பணிமனையிலிருந்து திருடுபோன அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூா் அருகே மீட்கப்பட்டது. அந்த பேருந்தை ஓட்டிச் சென்ற ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சென்னை-திருப்பதி செல்லும் பேருந்து கோயம்பேடு பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தை எடுப்பதற்காக ஓட்டுநா் மற்றும் நடத்துநா் வியாழக்கிழமை காலை அங்கு சென்றபோது, நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பேருந்தை காணவில்லை.

இதுகுறித்து கோயம்பேடு பேருந்து பணிமனை கிளையின் மேலாளா் ராம்சிங் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸாா் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கினா்.

அப்போது, பேருந்தின் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து இருக்கும் இடத்தை ஆய்வுசெய்தபோது, ஆந்திர மாநிலம், நெல்லூா் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற கோயம்பேடு போலீஸாா், நெல்லூா் காவல்துறை உதவியுடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நெல்லூா் அத்மகூா் என்ற இடத்திலிருந்து பேருந்தை மீட்டனா். மேலும், பேருந்தை திருடிச் சென்ற ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஞானசஞ்சன் சாஹூ (24) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

Government bus stolen in Koyambedu was caught in Nellore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.