நாங்கள் அதிகமான தொகுதிகள் வேண்டும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என கேட்பது எங்களது உரிமை. அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம். வேறு கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று கூறுவது சமூக ஊடகங்களில் வரும் வதந்தியாகும். எடப்பாடி பழனிசாமி அரசியல் பேச வேண்டுமே தவிர, தனி நபர் விமர்சனம் செய்யக் கூடாது, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைப் பற்றி தனி நபர் விமர்சனம் செய்கிறார். செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சிக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நான் தலைவராக இருக்கும்போது ஶ்ரீபெரும்புதூர் தொகுதியை போட்டியிட கொடுத்தேன். ராஜீவ்காந்தி நினைவகம் உள்ளதால், காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதியை சோனியாகாந்தியிடம் ஒப்புதல் பெற்று கேட்டுப் பெற்றோம். திமுகவினர் எங்களது கூட்டணியின் நண்பர்கள். அவர்களிடம் நாங்கள் கேட்பது எங்களது உரிமை. அதனை எடப்பாடி பழனிசாமி, திமுகவின் விசுவாசி என கூறுவது தவறானதாகும். நாங்கள் 110 இடங்களில் போட்டியிட்டவர்கள். தற்போது குறைவான இடங்களில் போட்டியிடுகிறோம். அந்த நிலை மாற வேண்டும் என கருதுகிறோம்.