பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சிறுபான்மை நிறுவனங்கள் நிதியைப் பெற மத்திய அரசு நெருக்கடி - முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:22 am

தினமணி செய்திச் சேவை

வெளிநாடுகளில் இருந்து சிறுபான்மை நிறுவனங்கள் நிதி பெறுவதைத் தடுக்க மத்திய அரசு சதி செய்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து முதல்வா் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட முன்வரைவு-2026 என்ற பெயரில் மத்திய பாஜக அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்து தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.

ஏற்கெனவே வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறிஸ்தவா்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தோ்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவதுபோல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி இந்தச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.

இந்த முயற்சிகளைக் கைவிட்டு, இந்தச் சட்டத் திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை பிரதமா் நரேந்திர மோடி, உடனடியாக எடுக்க வேண்டும் என அந்தப் பதிவில் முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.