சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கு கோடைகால சிறப்பு ரயில் ஏப். 12 -ஆம் தேதி உள்ளிட்ட 3 நாள்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஏப். 12, 19, 26 ஆகிய (ஞாயிற்றுக்கிழமைகள்) தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06039) ஏப். 15, 22, 29 (புதன்கிழமைகள்) ஆகிய தேதிகளில் பிகாா் மாநிலம் பரோனி நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஏப். 15, 22, 29 ஆகிய தேதிகளில் பரோனி நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06040) ஏப். 18, 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள இரண்டு அடுக்க பெட்டி, 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 10 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யஞ்சன் பெட்டிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தாம்பரம் - சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரயில்கள்

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

போத்தனூரிலிருந்து பரோனிக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



