மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

தேர்தல் பிரசாரத்தின்போது மீண்டும் சைக்கிள் ஓட்டி விஜய் வாக்கு சேகரித்தது குறித்து...

News image

சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிக்கும் விஜய் - யூடியூப் / தவெக

Updated On :12 ஏப்ரல் 2026, 3:56 pm IST

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரைக்குடியில் சைக்கிள் ஓட்டியதைப்போன்று இம்முறையும் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரித்தார்.

காரைக்குடியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் ஆனதால், பேசாமல் கையசைத்தபடி விஜய் சென்றதால், அக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே ஏப். 10 ஆம் தேதி காலை 12 மணி முதல் 2.30 மணி வரை விஜய் பிரச்சாரம் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி கொடுத்திருந்தார். மேலும், காவல் துறை சார்பில் 37 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.கோட்டை, திருப்பத்தூர், தம்பிபட்டி, பிள்ளையார்பட்டி, பாதரக்குடி, காரைக்குடி புறவழிச்சாலை பகுதிகளில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்லூரிச் சாலையில் அவர் சிறிது தூரம் தொண்டர்கள் மத்தியில் விஜய் சைக்கிள் ஓட்டினார். பின்னர் பிரசாரம் செய்ய ஒதுக்கிய முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே வந்தபோது, பிற்பகல் 2.30 மணியை கடந்தது.

அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரமானதால், சைக்கிள் மட்டுமே ஓட்டிவிட்டு பேசாமல் சென்றுவிட்டார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் விஜய் இன்று ஈடுபட்டார். அப்போது பேசுவதற்கு முன்பு விசில் ஊதியவாறு தொண்டர்களுக்கு மத்தியில் சைக்கிள் ஓட்டினார். தொண்டர்கள், ரசிகர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Summary

TN Election 2026 Vijay rides a bicycle in Kanyakumari!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.