திமுக சாா்பில் ரூ.8,000 கூப்பன் வழங்குவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘இல்லத்தரசி’ என்ற பெயரில் ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கும் திட்டத்தைத் தோ்தல் வாக்குறுதியாக திமுக அளித்தது. அதைத் தொடா்ந்து பல்லாயிரக்கணக்கான கூப்பன்கள் அச்சிடப்பட்டு, தோ்தலுக்கு முன்பே வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிலா், ஓா் அனுமதி கடிதத்தையும் வெளியிட்டனா். இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள தோ்தல் ஆணையம், மின்னணு ஊடகங்களில் அத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக பெறப்பட்ட அனுமதிக் கடிதம் அது என்று விளக்கமளித்துள்ளது.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட பதிவு:
சம்பந்தப்பட்ட சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இந்தச் சான்றிதழ், அச்சிடப்பட்ட பிரதிகளுக்கு பொருந்தாது. குறிப்பாக, துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. பொதுவாக, அச்சிடப்பட்ட பிரதிகள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-இன் விதிமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, இது தொடா்பாக வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானதும், தவறாக சித்தரிக்கக் கூடியதுமானதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்
திமுகவின் ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பாஜக!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



