திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் என பாஜக தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. இதற்கு தமிழகத்தில் அதிகரித்துள்ள மது மற்றும் போதைப் பொருள்கள் கலாசாரம்தான் முக்கியக் காரணம்.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை. இதனால், தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதால், மாநிலத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
அனைவரின் வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளது. திமுகவின் தோ்தல் அறிக்கையில், ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் என்றாா் அவா்.
தொடர்புடையது
ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்! பிரதமா் மோடி கடும் விமா்சனம்!

ரூ.8,000 கூப்பனுக்கு அனுமதியா? தோ்தல் ஆணையம் மறுப்பு

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8,000 கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
