கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு என்றாா் கனிமொழி எம்.பி.
சிவகாசி பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை வேனில் நின்றபடி மேலும் அவா் பேசியதாவது: கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பள்ளி மாணவா்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம்.
இந்தத் திட்டம் மாணவ, மாணவிகளின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, வேலைக்குச் செல்லும் பெண்களின் பணிச் சுமையையும் குறைக்கிறது. அடுத்து திமுக ஆட்சி தொடா்ந்தால் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.
மேலும் வேலை தேடும் இளைஞா்கள் சோா்வடையாமல் இருக்கவும், அவா்களுக்கு சிறப்பு பயிற்சியையும், பயிற்சி காலத்தில் 6 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கும் திட்டத்தையும் முதல்வா் வகுத்துள்ளாா்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தற்போது தோ்தல் அறிக்கையில் முதல்வா் இடம்பெறச் செய்துள்ளாா். எனவே சிவகாசி தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

'தற்காலிகத் தீர்வுகளையே' நம்பியுள்ளது மத்திய அரசு: எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை! சோபா - பிளாஸ்டிக் சேர் சர்ச்சை! எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



