திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

மு.க. ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு

திருச்சி துறையூர் பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது பற்றி...

News image

திருச்சி துறையூர் பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி - congress

Updated On :18 ஏப்ரல் 2026, 11:53 am

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரினார்.

இன்று பொன்னேரி, சோளிங்கர் பகுதிகளைத் தொடர்ந்து திருச்சி துறையூரில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. முன்னெப்போதும் இல்லாத அளவு கடுமையான தேர்தல். என்ன விலை கொடுத்தாவது முதல்வர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலினை நீக்கிவிட்டு, பதிலாக ஒரு பொம்மை முதல்வரை நியமிக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள்.

அதிமுக தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கட்சி. ஆனால் இப்போது பாஜகவின் முகமூடியாகவும் பொம்மை கட்சியாகவும் இருக்கிறது அதிமுக. இவர்கள் வழியில்தான் பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் தமிழ்நாட்டுக்குள் நுழையப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் மொழி, கலாசாரத்தைச் சிதைக்க நினைக்கிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தங்களது ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பாஜகவிடம் சரணடந்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறை போன்ற அமைப்புகளால் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். அவர் தமிழ்நாட்டுக்கான தனது கொள்கைகளை எதற்காகவும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்றும் பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். சமூக நீதி இங்கு எவ்வளவு காக்கப்படுகிறது என மற்ற மாநிலங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

டிரம்ப் நினைப்பதை மோடி செய்வார், டிரம்ப் என்ன சொல்கிறாரோ அதையே மோடி செய்வார். மோடியை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் டிரம்ப். அதுபோலவே மோடி சொல்வதைச் செய்ய ஒரு முதல்வர் தேவைப்படுகிறார்.

அமெரிக்காவிடம் இந்தியாவை விற்றுவிட்டார் மோடி. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், தரவுகள், எரிசக்தி அனைத்தையும் விற்றுவிட்டார் மோடி. எப்ஸ்டீன் கோப்புகள் மூலமாக மோடியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது அமெரிக்கா.

ஒரு பக்கம் நாம் இருக்கிறோம், மற்றொரு பக்கம் பாஜகவுடன் அதிமுக நிற்கிறது. பாஜக அரசு நம் முதல்வர் ஸ்டாலினை அகற்றிவிட்டு பொம்மை முதல்வரை வைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றார்.

Summary

PM Modi Sold Off India; But M.K. Stalin Cannot Be Subdued: Rahul Gandhi in Trichy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.