மார்ச் 15ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தும் அதிக பிரசாரங்களை ரத்து செய்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
கடலூர், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டங்கள் இதுவரை மூன்று முறை அனுமதி பெற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல பிரசாரக் கூட்டங்களுக்கு, தவெகவினர் பெரும் முயற்சி எடுத்து காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்ற நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக சனிக்கிழமை என்றாலே பிரசாரங்களுக்குச் செல்வதில் விஜய்க்கு ஏதோ ஒரு தயக்கம். தவெகவினர் இது பற்றி கூறுகையில், கரூர் நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, விஜய் தான் பங்கேற்கும் பிரசாரங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறார்கள்.
ஆனால், ஒவ்வொரு பிரசாரமும் ரத்தாகும்போது, ஊடகங்கள், தகவல்கள் வெளியிடுகின்றன. தவிர அது பற்றி அதிகாரப்பூர்வ செய்திகளோ, ரத்து செய்யப்படுவது ஏன் என்பது குறித்த காரணங்களோ வெளியிடப்படுவதில்லை. ஒருவேளை அதெல்லாம் அவர் தனிப்பட்ட தகவல் என்றும் பதிலளிக்கலாம்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் மையமே தவெக தலைவர் விஜய் என்ற அளவில் தேர்தல் களம் மாறியிருக்கிறது. எங்குச் சென்றாலும் தவெக வெற்றி பெறுமா? கட்சி, தலைவர் பற்றிய பேச்சாகவே உள்ளது. ஆனால், அவர் மக்களிடையே பேசுவதுதான் குறைவாக உள்ளது. மார்ச் 30ஆம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அன்று பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்தார். பிறகு வில்லிவாக்கம் பிரசாரம் ரத்தானது.
அதன்பிறகு ஏப்ரல் 2, 4ஆம் தேதிகளில் பிரசாரம் நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு நான்கு நாள்கள் பிரசாரம் இல்லை. திநகர், வில்லிவலாக்கம் சாலைவலம் கூட ரத்தானது. பல்வேறு நிபந்தனைகளுடன் தவெகவுக்கு காவல்துறை அனுமதி கொடுக்கும் நிலையில் அவர்களே அனுமதி கொடுத்தாலும் தவெக தலைவர் விஜய் அவர் போக்கில் ரத்து செய்துவிட்டுப் போகிறார்.
பிறகு ஏப்ரல் 8ஆம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மிகப்பெரிய பிரசாரக் கூட்டம். நகரமே அதிர்ந்தது. புகைப்படங்களைப் பார்த்த யாருமே ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் மறுநாள் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. கடலூர் கூட்டம் ரத்தானது, ஆனால், அப்போது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. மக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் ரத்தானதாகக் கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அனுமதி பெறப்பட்டிருந்த ஏப்ரல் 11ஆம் தேதி கடலூர், ஏப்ரல் 13ஆம் தேதி திருவள்ளூர் பிரசாரங்கள் ரத்தாகின. இதனால், அந்தத் தொகுதி வேட்பாளர்கள் சற்று கவலை அடைந்தனர்.
பிறகு கன்னியாகுமரி தொகுதியில் விஜய் பிரசாரம் செய்தார். சாலைவலமாக சென்று மக்களை சந்தித்தார். இடையே, காரைக்குடியில் தாமதமாக வந்து காத்திருந்த மக்களை ஏமாற்றிவிட்டு பேசாமலேயே சென்றுவிட்டார் விஜய்.
அடுத்து தருமபுரி, திருப்பூரில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தருமபுரியை ரத்து செய்துவிட்டு திருப்பூர் சென்றார். இன்று பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் ரத்தாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்றாவது முறையாக, கடலூரில் ஏப்ரல் 19 பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதையும் விஜய் ரத்து செய்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம். அதுவும் ரத்தாகுமா? அல்லது திருச்சி தொகுதிக்காக கடலூர் பிரசாரம் ரத்தானதா என்பதற்கு எல்லாம் விளக்கம் இல்லை.
தவெகவினரின் ஒரே பலமாக இருப்பது விஜய் மட்டும்தான். அவர் வந்தாலே அந்த நகரம் முழுக்க விஜய் கோஷமும், விசில் சப்தமுமாக இருக்கிறது. அவரது வேட்பாளர்களுக்கும் அவர்தான் நட்சத்திர பேச்சாளர்.
இப்படியிருக்க, அவர் தொடர்ந்து பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்வது எதிர்க்கட்சியினருக்கே வாய்ப்பாக போகும் என்று கட்சிக்குள் பேசப்படுகிறது.
கரூர் நெரிசலுக்குப் பிறகு, விஜய் கவனத்துடன் செயல்பட்டு வந்தாலும் தொடர்ந்து ஒரு இடத்தில் மூன்றாவது முறை, நான்காவது முறை என தேர்தல் பிரசாரங்கள் ரத்தாகும்போது, அந்தத் தொகுதி தவெகவினருக்கு கவலை ஏற்படத்தான் செய்யும்.
எதிர்க்கட்சியினரும் விஜய்யின் பிரசாரக் கூட்டங்கள் ரத்து குறித்து கடுமையாக விமரிசித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சனிக்கிழமைகளில் அதிக பிரசாரங்களை விஜய் ரத்து செய்திருப்பதும் பேசுபொருளாகியிருக்கிறது. இன்று சனிக்கிழமை பெரம்பூர் பிரசாரம் ரத்து செய்தியும், நாளை கடலூர் பிரசாரம் ரத்து செய்யும் ஒன்றாக வெளியாகிறது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதி, அதிமுக பொதுக் செயலர் பழனிசாமி என அனைவரும் அயராது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் கிட்டத்தட்ட மாநிலத்தை ஒரு முழுச் சுற்று சுற்றிவிட்டு வந்திருப்பார்கள் என்றே சொல்லலாம். ஆனால், முக்கிய தொகுதிகளில் கூட விஜய் இன்னமும் பிரசாரத்தை நிறைவு செய்யவில்லை.
பிரசாரத்துக்கு ஒரு சில நாள்களே இருக்கும் நிலையில், விஜய் பிரசாரம் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதும், அதற்குரிய காரணங்கள் அறிவிக்கப்படாமல் விடப்படுவதும், கட்சிக்கு நல்லதல்ல என்றே கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைப் பற்றிய பேச்சின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் விஜய் இனியாவது விழிப்பாரா?
Summary
TVK leader Vijay is the most absentee in the election campaign!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


