மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம்: ராஜ்நாத் சிங்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

News image

வாசுதேவநல்லூரில் ராஜ்நாத் சிங் - விடியோ க்ளிப்

Updated On :19 ஏப்ரல் 2026, 9:51 am

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் பாஜக தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதற்குக் காரனம், முதல்வரும் அவரது மகனும்தான்.

கள்ளக்குறிச்சியில் திமுகவின் அலட்சியத்தால்தான் மக்கள் பலியாகினர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றும் வழக்கத்தை அனுமதிக்க நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டபோதிலும், கார்த்திகைத் தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களை தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

இங்கே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைந்ததும், கார்த்திகைத் தீபம் ஏற்றப்படும். இது உங்கள் உரிமை. இதுவே பாஜகவின் உத்தரவாதமும்கூட.

திமுகவும் காங்கிரஸும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் தடுத்து விட்டன. மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்.

திமுக எம்எல்ஏக்கள் மணற்கொள்ளை மூலம் ரூ. 5,000 சம்பாதித்துள்ளனர். மக்களுக்கான நிதியும் திமுகவினருக்கே சென்றுள்ளது. திமுகவினர் கொள்ளையடித்த ஊழல் பணத்தை மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார்.

Summary

The Chief Minister and his son are solely responsible for the deterioration of law and order in Tamil Nadu: BJP Leader Rajnath Singh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.