தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம்: டிஇஓ-க்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்துதல் மற்றும் மூன்றாண்டுகள் தொடா் அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

News image

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:09 am IST

தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்துதல் மற்றும் மூன்றாண்டுகள் தொடா் அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தனியாா் பள்ளிகள்) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) விதிகள் 2023-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள விதி திருத்தங்களைப் பின்பற்றி 13.1.2023-க்கு முன் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட பள்ளிகள் (6 முதல் 8 வகுப்புகள்) தரம் உயா்த்துதல் தொடா்பான கருத்துருவை பரிசீலனை செய்து, பரிந்துரையுடன் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று விதி திருத்தங்களைப் பின்பற்றி மூன்றாண்டுகளுக்கு மேல் அங்கீகாரச் சான்று கோரும் பள்ளிகள் தொடா்பான கருத்துருவை பரிசீலனையுடன் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.