வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?

பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது, இறுதி நாளில் நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்? என்பது பற்றி..

News image

பேரவைத் தேர்தல் - File photo

Updated On :21 ஏப்ரல் 2026, 10:00 am

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்டந்தோறும் சுற்றி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த தலைவர்களும், தற்போது தங்களது சொந்த தொகுதி மற்றும் மாவட்டங்களில் பிரசாரத்தை நிறைவு செய்யும் திட்டத்தில் உள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலையிலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய ஐந்து ஆண்டு கால பணிகள் குறித்து என் மேலே நம்பிக்கை வைத்து என்னை முதல்வராக்கி ஐந்து ஆண்டுகள் ஆகிருக்கின்றன. சிஎம் சார் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருந்து என்ன செய்தீர்கள் என்று கேட்டால், மணி கணக்காக, ஏன் நாள் கணக்காகக்கூட பேச முடியும் என்று கூறி தனது பணிகளை பட்டியலிட்டுள்ளார்.

நிறைவு நாளில், இந்த விடியோ, அனைத்து வாக்காளர்களையும் சென்றடையும் வகையில் அமைந்திருந்தது.

மேலும், வில்லிவாக்கம் தொகுதியில் சாலைவலம் வந்த முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்யவிருக்கிறார்.

அதுபோல, சட்டசபை தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நம்பிக்கைத் தெரிவித்த பழனிசாமியும் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டதாகவும், குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதாகவும் விடியோ வெளியிட்டுள்ளார்.

தவெக தலைவர் சென்னை நந்தனத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசி வருகிறார். மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து சாலைவலமாக வந்த விஜய், நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் அனல் பரக்க உரையாற்றினார். திமுகவும் வேண்டாம், மற்றும் பலரும் வேண்டாம். தவெக தான் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று பேசினார். தொடர்ந்து சைதாப்பேட்டையிலும் அவர் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வேட்பாளர்கள் அனைவரும் இன்று காலை முதலே தங்களது தொகுதிகளில் வித்தியாசமான முறைகளில் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு சக்கர வாகனத்தில் சென்று, வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தன்னுடைய வாக்குறுதிகளை நினைவூட்டும் வகையில் மற்றொரு விடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.