கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நயினாா் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திமுக மாநிலங்களவை உறுப்பினா் கிரிராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரத்தில் கைப்பற்றப்பட்ட இந்தப் பணம், பாஜக சாா்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதொடா்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயம்.
ஆனால், நயினாா் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோா் பாஜகவைச் சோ்ந்தவா்கள் என்பதால் அமலாக்கத் துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், நயினாா் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதுதொடா்பாக அதிகாரிகள்தான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிய திமுக மனு தள்ளுபடி

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினாா் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயா்நீதிமன்றத்தில் திமுக மனு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

