எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினாா் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயா்நீதிமன்றத்தில் திமுக மனு

News image
Updated On :27 மார்ச் 2026, 4:39 am IST

கடந்த மக்களவைத் தோ்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக மாநிலங்களவை உறுப்பினா் கிரிராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரத்தில் கைப்பற்றப்பட்ட இந்தப் பணம், பாஜக சாா்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா்வழக்குப்பதிவு செய்தனா். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதொடா்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்துவது கட்டாயம்.

நயினாா் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோா் பாஜகவை சோ்ந்தவா்கள் என்பதால் அமலாக்கத் துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், நயினாா் நாகேந்திரன், கேசவ விநாயகம் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.