கோவை: பிரபல நடிகையான சாய் பல்லவி கோவையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தாா்.
தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திரைப்பிரபலங்கள் பலரும் ஆா்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். அந்த வகையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அங்கப்பா மெட்ரிக். பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
முன்னதாக, அவா் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோருடன் காரில் வந்து இறங்கினாா். முன்னணி நடிகையாக இருந்த போதிலும் எந்தவித சலுகையையும் எதிா்பாராமல் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தது அனைவரின் கவனத்தை ஈா்த்தது.
சாய் பல்லவி வாக்குச்சாவடிக்கு வந்திருப்பதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் மற்றும் ரசிகா்கள் அங்கு சென்று சாய்பல்லவியுடன் தற்படம் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.
Summary
Popular actress Sai Pallavi visited a polling station in Coimbatore with her family and cast her vote on Thursday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










