ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சாய் பல்லவியால் தாமதமாகும் சுப்புலட்சுமி படப்பிடிப்பு?

சுப்புலட்சுமி பயோபிக் குறித்து...

சாய் பல்லவி, எம். எஸ். சுப்புலட்சுமி

Published On :

நடிகை சாய் பல்லவியால் சுப்புலட்சுமி திரைப்பட பணிகள் தாமதமாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கில் தன் வணிகத்தை பலமாக வைத்திருப்பவர் தற்போது ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இப்படம் தயாராகி வருகிறது.

இதற்கிடையே, மறைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதில் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட தகவல்கள் வெளியாகாமல் இருந்ததால் இதிலிருந்து சாய் பல்லவி விலகியதாகக் கூறப்பட்டது.

ஆனால், சாய் பல்லவி விலகவில்லை என்றும் ராமாயணா படத்திற்காக அதிக நாள்களை ஒதுக்கியதால் சுப்புலட்சுமி படத்திற்கான படப்பிடிப்பைத் துவங்க முடியாமல் இருப்பதாகத் தயாரிப்பு கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாய் பல்லவி ராமாயணாவை முடித்துவிட்டு வந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reports suggest that work on the film Subbulakshmi is being delayed due to actress Sai Pallavi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.