ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம்!

தமிழ்நாட்டில் வெய்யில் காரணமாக மக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

வெய்யில் நேரம்

Published On :

கடுமையான வெய்யில் காரணமாக, மக்கள் அவசியமின்றி பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாகவே கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது. இந்த நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸை தொடலாம். அதிக வெப்பநிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடும் வெப்பம் காரணமாக பச்சிளம் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்படலாம். குறைவாக சிறுநீர் கழித்தாலோ அல்லது பால் குடிக்காமல் அழுதுகொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவர்களை நாடவும் தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மிகவும் அவசியமின்றி மக்கள் யாரும் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெய்யில் நேரத்தில் காபி, தேநீர் போன்ற சூடான பானங்களை அருந்துவதைத் தவிர்க்கவும் மக்களுக்குக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதுபோல, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம், பழச்சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை அருந்தலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

Summary

People in Tamil Nadu advised not to go out between 12 noon and 3 pm due to heatwave

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.