தொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

வெய்யில்: பகல் 12 - 3 மணி வெளியே வர வேண்டாம்! நீர் ஆகாரங்களைப் பருகுங்கள்!

கோடை வெய்யிலில் இருந்து தற்காத்துக்கொள்ள மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்கள்...

summer: Do not come outside between 12 PM and 3 PM: Ministry of Health and Family Welfare

கோப்புப் படம் - ANI

Published On :

நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெய்யில் அதிகமாக இருப்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்,

வெய்யில் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செல்ல வேண்டாம்.

பிற்பகலில் வெளியே இருக்கும்போது ஓடுவது, கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். கண்டிப்பாக செருப்பு அணிந்து செல்ல வேண்டும்.

கோடை வெய்யில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரத்தில் வீட்டில் சமைப்பதைத் தவிர்க்கவும். சமையலறை போதுமான காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.

மது, தேநீர், காபி, செயற்கை பானங்கள் அல்லது அதிக சர்க்கரை கொண்ட பானங்களைத் தவிர்க்கவும்.

அதிக புரதச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். பழைய உணவை உண்ண வேண்டாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் விட்டுச் செல்ல வேண்டாம்.

யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ அல்லது வெப்பத்தால் மயக்க நிலைக்கோ, குழப்பமான மனநிலைக்கோ சென்றால் உடனடியாக 108 அல்லது 102 என்ற அவசர எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும்.

Story image

Summary

Summer: Do not come outside between 12 PM and 3 PM: Ministry of Health and Family Welfare

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.