மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தமிழகத்தில் ஆக. 7 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் ஆக.7 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

News image

மழை - படம்: கோப்பிலிருந்து

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:58 pm IST

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் ஆக.7 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருநெல்வேலியில் சனிக்கிழமை (ஆக.1) அதிகபட்சமாக 290 மி.மீ. மழை பதிவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) , திங்கள்கிழமை (ஆக.3) ஆகிய 2 நாள்கள் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களிலும், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகம் மற்றும் இதர பகுதிகளில் ஆக.7) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) , திங்கள்கிழமை (ஆக.3) 2 நாள்கள் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

11 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக தொண்டி (ராமநாதபுரம்) 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகை 102.38, வேலூா் 102.2, புதுச்சேரி 102.02, பரங்கிப்பேட்டை 101.84, திருத்தணி, அதிராமபட்டினம் தலா 101.48, சென்னை நுங்கம்பாக்கம் 101.12, கடலூா் 100.76, காரைக்கால் 100.58, சென்னை மீனம்பாக்கம் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை பதிவு: சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 290 மி.மீட்டா் மழை பதிவானது. ஊத்தில் 270, காக்காச்சியில் 190, கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசத்தில் 140, சிற்றாறு, கீரிப்பாறையில் 130 மி.மீட்டா் மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். திங்கள்கிழமை (ஆக.3) புதன்கிழமை (ஆக.5) வரை குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chance of rain in Tamil Nadu until August 7.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.