இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

பிரதமரின் போதைப் பொருளில்லா இளைய தலைமுறை பிரசாரம்! அமிர்த வித்யாலயம் பங்கேற்பு!

போதைப்பொருள் இல்லாத இளைய தலைமுறைக்கான உறுதிமொழிப் பிரசாரத் திட்டம் தொடங்கப்பட்டது பற்றி....

News image

அமிர்த வித்யாலயம்.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 9:24 am IST

பிரதமரால் போதைப் பொருளில்லா இளைய தலைமுறைக்கான உறுதிமொழிப் பிரசாரத் திட்டம் இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இணைய வழியில் பிரதமரின் உரையை அமிர்த வித்யாலயம், நெசப்பாக்கம் கேகேநகர் பள்ளியைச் சார்ந்த 2,500 மாணவர்கள் மற்றும் 250 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நேரலை காணொளி மூலம் கண்டும், கேட்டும் விழிப்புணர்வு அடைந்தனர்.

அப்போது, போதைப் பொருளில்லா இளைய தலைமுறை மற்றும் 'விக்சித்பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) ஆகியவற்றை உருவாக்குவதற்கான தங்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக டாக்டர் எஸ். ஆர். நிரஞ்சன் மற்றும் சிறப்பு விருந்தினராக டாக்டர் ஐ. ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

கௌரவ விருந்தினரான டாக்டர் எஸ்ஆர் நிரஞ்சன் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் அறிவுரைகள் வழங்கினார். போதைப் பழக்கத்திற்கு உட்படுவது உகந்ததல்ல என்றும் அது ஒருவழிப்பாதை மீண்டெழுவது மிகக் கடினமான செயல் என்றும் எடுத்துக் கூறினார். அதோடு மாணவர்களுக்கு உயர்கல்வி தேர்ந்தெடுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

Story image

சிறப்பு விருந்தினரான டாக்டர் ஐ. ஜெயந்தி பேசுகையில் போதைப்பொருள் தடுப்பு சட்டதிட்டங்கள் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்து, நாட்டைப் போதைப் பழக்கமற்றதாக மாற்றுவதே நஷாமுக்த் பாரத் அபியான் (NashaMukt Bharat Abhiyaan) திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதனை முன்னெடுக்கும் விதமாக,

• இளைஞர்கள் சுயநம்பிக்கையுடனும், போதைப்பொருள் பழக்கவழக்கங்கள் இன்றியும் இருப்பது மிக அவசியம்

• இந்த இயக்கமானது தனிநபர் ஒருவருக்கானது மட்டுமல்ல, மாறாக குடும்பங்கள், சமூகம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பயனளிக்கும் ஒரு மக்கள் இயக்கம்

• இந்த தொடக்கம் மூலம் அடுத்த 100 வாரங்களுக்கு நாடு முழுவதும் 'ஜன்பகிதாரி' (மக்கள் பங்கேற்பு) விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்படும். இதுதொடர்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

இதனை முன்னெடுக்கும் விதமாகவும் பின்பற்றும் நோக்குடனும் நெசப்பாக்கம், கே.கே. நகரில் உள்ள அமிர்த வித்யாலயம் பள்ளி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் வினாடி-வினா போட்டி, ஓவியப் போட்டி, SRMIST-ஐச் சேர்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் உரை மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் ஆகியவை அடங்கும்.

SRMIST -ஐச் சேர்ந்த டாக்டர்.டி. சத்யா, டாக்டர் பி. கல்பனா ஆகியோர் மாணவர்களிடம் பேசுகையில் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கூறினர்.

விழிப்புணர்வு நடைப்பயணத்தின்போது மாணவர்கள் பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு தொடர்பான வாசகங்களைக் எடுத்துக் கூறி பிரசாரம் செய்தனர்.

Summary

The Prime Minister inaugurated the online pledge campaign for a drug-free younger generation on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.