மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி!

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து...

DMK Udhayanidhi stalin

கைது செய்து அழைத்துச் செல்லப்படும் உதயநிதி ஸ்டாலின் - பிடிஐ

Published On :

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தஞ்சை தெற்கு நகர காவல் நிலையத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்ததால், செங்கிப்பட்டிக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்த தகவல் அறிந்து தொண்டர்கள் பலர் செங்கிப்பட்டி காவல் நிலையம் நோக்கி வருவதாகத் தெரிகிறது. இதனால் செங்கிப்பட்டி காவல் நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திமுகவினர் யாரையும் அனுமதிக்காத வகையில் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், எ.வ. வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மட்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது ஏன்? என முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றம் கூறிய காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், உதயநிதியை காவல் துறையினர் அலைக்கழிப்பதாக திமுக வழக்குரைஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Summary

DMK Udhayanidhi stalin being taken to Sengipatti instead of Thanjavur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.