தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதன்கிழமை (ஆக. 5) 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

தமிழகத்தில் புதன்கிழமை (ஆக. 5) 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு உள் கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இது தவிர, இலங்கையின் தென்மேற்கு பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், அதையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டல ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, புதன்கிழமை (ஆக. 5) சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, கரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை புகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

தேனி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் வியாழன், வெள்ளி (ஆக. 6, 7) ஆகிய இரு நாள்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இரு இடங்களில் வெயில் சதம்: திருச்சியில் 100.58, மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவாரூா் மாவட்டம் கொடவாசலில் 70 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.