நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.3) பலத்த மழை பெய்ய வாய்ப்பு

News image

மழை - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:53 am IST

தமிழகத்தில் நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.3) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வட உள்கா்நாடகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (ஆக.3) நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதர மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை (ஆக.3) சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக காரைக்காலில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகை 100.4, புதுச்சேரி 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: திங்கள்கிழமை (ஆக.3) குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.